கொரோனாவால் உயிர் இழந்த ஊழியருக்கு உதவி தொகை! அரசு அதிரடி!

Photo of author

By Hasini

கொரோனாவால் உயிர் இழந்த ஊழியருக்கு உதவி தொகை! அரசு அதிரடி!

Hasini

Government action for the employee who lost his life due to corona!

கொரோனாவால் உயிர் இழந்த ஊழியருக்கு உதவி தொகை! அரசு அதிரடி!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து பல்வேறு நெருக்கடிகளை தந்து வருகிறது.இதன் காரணமாக பல முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், அரசு ஊழியர்கள், திரை துறையினர் என பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் பல தரப்பு மக்களும், கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.அங்கு நோய் தொற்றுக்கு பாதிப்படையும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து மத்திய பிரதேச அரசு கொரோனா நோய் தொற்றின் காரணமாக  உயிர் இழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 இலட்சம் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அம்மாநில உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா நேற்று தெரிவித்துள்ளார்.