நாளை முதல் செயல்படும்- அதிரடி அறிவிப்பு!

0
208

தமிழ்நாடு முழுவதும் தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சக்கட்டத்தில் இருந்து வந்தது. இதன் காரணமாக முழு ஊரடங்கு மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தற்போது சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக நோய் தொற்று குறைந்து வருவதால் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மூன்று வகைகளாகப் பிரிக்கப் பட்ட மாவட்டங்களில் வகை 2 மற்றும் 3 ஏற்கனவே பேருந்துகளுக்கு அனுமதி அளித்த நிலையில் இந்தத் தளர்வில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீதம் பேர் உட்கார்ந்து சாப்பிடலாம் என்ற புதிய தளர்வு அளிக்கப்பட்டது.

கடைகள் அனைத்தும் 8 மணி வரை திறந்து வைத்திருக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தனியார் மற்றும் அரசு போக்குவரத்து பேருந்துகள் நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கலாம் என்று அறிவிப்பு வந்துள்ளது. அதே போல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Previous articleதனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற தேவைப்படும் ஆவணங்கள்?- அரசு அறிவிப்பு!
Next articleஇலவசப் பயணச் சீட்டில் மாற்றத்தை கொண்டு வந்த அரசு!