சுங்க கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் திருப்பி அனுப்பிய அரசு பேருந்து !!

Photo of author

By Parthipan K

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுங்க கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசு பேருந்தை திரும்பி அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து ஓசூருக்கு பயணிகளுடன் புறப்பட்டு சென்ற அரசு பேருந்து கிருஷ்ணகிரி சுங்க சாவடியை கடந்து முயன்றபோது அரசு பேருந்து வழக்கமாக வழங்கப்படவேண்டிய சுங்கசாவடி பாப்பாஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் சுங்க சாவடியை கடந்து செல்ல அரசு பேருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

குறைந்த அளவிலேயே பயணிகளை ஏற்றிச் சென்றதால் நடத்துனரிடம் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் திணறியுள்ளனர்.இதனை அடுத்து ஓசூருக்கு செல்ல வேண்டிய பயணிகள் சுங்க சாவடியிலேயே இறக்கி விடப்பட்டனர்.

பின்னர் ஓசூரில் இருந்து மாற்று பேருந்து வரவழைத்து சுங்கச்சாவடியில் இருந்து பயணிகளை ஓசூருக்கு அனுப்பி வைத்தனர்.திருவண்ணாமலையில் இருந்து வந்த பேருந்தை மீண்டும் செல்ல திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழக அதிகாரி உத்தரவிட்டார்.

குறைந்த அளவில் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் அவற்றுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தி பாஸ் எடுத்திருப்பதாகவும், இனிவரும் காலங்களில் நடத்துனரிடம் சுங்க கட்டணம் செலுத்த அறிவுறுத்தப் படுவதாக தமிழக அரசு போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.

மேலும் சுங்க கட்டணம் தேவையில்லை என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அதிகரித்து வரும் நிலையில் குறைந்த பட்சம் அரசுப் பேருந்துகளுக்கு மட்டுமாவது சுங்க கட்டணத்திலிருந்து சலுகை அளிக்க வேண்டும் என்று கோரி கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளனர்.