அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதி!

0
213
Government buses abruptly stopped! People suffer from not being able to travel!
Government buses abruptly stopped! People suffer from not being able to travel!

அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணம் செய்ய முடியாமல் மக்கள் அவதி!

திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கிய ஐந்து அம்சத் திட்டங்கள் இன் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம். இது நடைமுறைக்கு வந்தது முதல் பல புகார்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர். பெண்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கி விடாமல் பல நடத்துனர்கள் விவாதம் செய்து வருகின்றனர். அதேபோல பேருந்து நிறுத்தத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பெண்கள் நின்றான் கண்டுகொள்ளாமலும் செல்கின்றனர். இதுபோல் பல புகார்கள் தற்போது வரை வந்து கொண்டுதான் உள்ளது.

அதேபோல மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி வருவதாலும் சமீபகாலமாக பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்றால் அந்த நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியது. அதன்பின் நடத்துனரும் ஓட்டுனரும் மாணவர்களை படியில் நின்று வருவதற்கு அனுமதிப்பதில்லை. அவ்வாறு விருதுநகர் அருகே கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் நடக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்தில் ஏறி உள்ளனர்.

அப்போது மாணவர்கள் பேருந்தில் உள்ளே வராமல் படியில் நின்றபடியே வந்துள்ளனர். அதனைக் கண்ட நடத்துனர் அவர்களை கண்டித்துள்ளார். நடத்துனர் கண்டித்தது பிடிக்காமல் கல்லூரி மாணவர்கள் சரமாரியாக அரசு பேருந்து நடத்துனரை தாக்கியுள்ளனர். நடத்துனரின் மாணவர்கள் தாக்குகின்றனர் எனக் கூறி அங்கிருந்த 50 அரசு பேருந்துகளும் இயங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றாடம் செல்பவர்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானவர்கள். பிறகு காவல்துறை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தை கைவிடும்படி நடத்துனர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். மாணவர்கள் தாக்கியதில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் படுகாயமடைந்தனர். இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleபோதைப்பொருள் விற்றால் இனி இதுதான் தண்டனை! மதுரைகிளை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
Next articleதிருமணத்தின் போது தீக்குளித்த மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை! கைத்தட்டி வரவேற்ற விருந்தினர்!