தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன செட்டாப் பாக்ஸ்களை வைத்திருப்பவர்கள், அதனை செயலாக்கம் செய்யாமல், உபயோகப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் சிறந்த டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு சேவைக்காக, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்கள் மூலம் மக்களுக்கு இதுவரை 35 லட்சத்து 97 ஆயிரத்து 479 வழங்கியுள்ளது.
மேலும் வழங்கியுள்ள செட்டாப்பாக்ஸ்களில், 7 லட்சத்து 60 ஆயிரத்து 470 செட்டாப் பாக்ஸ்கள் உபயோகப்படுத்தாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே அந்த செயலாக்கம் இல்லாத செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உடனடியாக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு திருப்பி வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உபயோகப்படுத்தாமல் செயலாக்கம் செய்யாமல் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது எனவும், உபயோகமில்லாத செட்டாப் பாக்ஸ்களை திருப்பி வழங்காதவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கேபிள் டிவி நிறுவன தலைவரும், அமைச்சருமான உடுமலை ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.