தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.டாஸ்மாக் கடைகளில்
கொலை,கொள்ளை மற்றும் பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் நடைப்பெற்று வருகின்றன.
மேலும் இதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுத்தும் அனைத்தும் பலனளிக்காமல் போனது. இதனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் இந்த சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை தடுக்க சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம் என முடிவு செய்துள்ளது.
இதன்படி ஒரு டாஸ்மாக் கடைக்கு இரண்டு கேமரா வீதம் மொத்தம் 3000 கடைகளுக்கு 6000 கேமராக்கள் முதலில் பொருத்தப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிசிடிவி கேமராக்கள் அதிகம் மது விற்பனையாகும் கடைகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை நேரும் கடைகளில் பொருத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.