இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்!

Photo of author

By Parthipan K

இழிவாகப் பேசியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அரசு ஊழியர் புகார்!

போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக புகார் எழுந்துள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் தன்னை சாதி பெயர் சொல்லி இழிவுபடுத்தியதாக முதுக்குலுதோர் வட்டார வளர்ச்சி அலுவலர் குற்றச்சாட்டியுள்ளார்.

இவர் அமைச்சர் ராஜகன்னப்பனின் அழைப்பின் பேரில் அவரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தன்னை சாதி பெயர் குறிப்பிட்டு பேசியதாகவும் வேறு மாவட்டத்துக்கு மாற்றி விடுவேன் என மிரட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேச்சால் நான் மனவுளைச்சலுக்கு ஆளாகினேன் என அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுயதாவது:-

நீ சேர்மன் பேசத்தான் கேட்ப சேர்மன் சொல்வதைத்தான் செய்வ போன் பண்ணாலும் எடுக்க மாட்ட எனக் கூறி சாதி பெயரை சொல்லி இழிவாக பேசியதாகவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும் இப்பவே இவன மாத்துங்க என்று ஆவேசமாக பேசுகிறார்.

அப்படி அவர் பேசும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லை. இது சம்பந்தமாக பட்டியளினத்தோர் நல ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதிகாரியின் இந்த குற்றஞ்சாட்டு பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.