குற்றத்தை ஒப்புக்கொள்ளாத அரசு ஊழியர்! சிறுநீர் குடிக்க வைத்த போலீஸ்! கோர்ட் செய்த அதிரடி!
அரசு ஊழியர் ஒருவரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிக்மகளூரு மாவட்டம் மூடிகேரே தாலுகாவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அர்ஜுன். இவர் கடந்த மே மாதம் பத்தாம் தேதி ஒரு வழக்கில் உண்மையை ஒத்துக் கொள்ளும்படி கிருகுந்தா கிராம பஞ்சாயத்து ஊழியர் ஒருவரிடம் வற்புறுத்தி உள்ளார். அவர் பெயர் புனித் என்பது தெரிய வந்தது.
ஆனாலும் அந்த வழக்கை புனித் ஒப்புக்கொள்ளாததன் காரணமாக, ஒப்புக்கொள்ள மறுத்து உள்ளார். இதனால் மிக அதிக ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுன் புனித்தை தாக்கியதோடு அல்லாமல், போலீஸ் நிலையத்தில் இருந்த குற்றவாளி ஒருவனிடன் இருந்து சிறுநீரைக் குடிக்க வைத்து சித்திரவதை செய்துள்ளார். இந்த சம்பவம் கர்நாடகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. எனவே சிஐடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் புனிதை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரம் தொடர்பாக அந்த போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் காரணமாக அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது ஆகாமல் இருப்பதற்காக ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் கர்நாடக ஹைகோர்ட்டில் நடந்தது. அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அர்ஜுனுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என கூறி, அவரின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர். இதனால் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்டிப்பாக கைது செய்யப்படலாம் என தெரிவதாக சொல்கிறார்கள்.