9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்! வரும் 31ம் தேதி வெளியாகும் வாக்காளர் பட்டியல்!

0
80

செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றார். இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வேலைகளை தமிழக தேர்தல் ஆணையம் முன்னரே தொடங்கி செய்துவருகின்றது. இந்த தேர்தலின் அடுத்தகட்டமாக 31 ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒன்பது மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக தமிழக தேர்தல் ஆணையம் மறுசீரமைக்கப்பட்ட வார்டு வாரியாக வாக்காளர் பதிவுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட இருக்கின்ற மாவட்டங்களில் இருக்கின்ற சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற இருக்கின்றாய் எந்த ஒரு வாக்காளரின் பெயரும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இணைக்கப்பட்டு அவர்கள் தொடர்புடைய உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்து அதன் மூலமாக அவர்கள் ஜனநாயக கடமையை சரிவர செய்ய வைக்க முயற்சிக்க வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் கருதுகிறது.

9 மாவட்டங்களில் இருக்கின்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தயார் செய்யப்படும் வாக்காளர் பட்டியல் தனியாக தயாரிக்கப்படுவது இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் தயார் செய்து சென்ற மார்ச் மாதம் 19ஆம் தேதி அன்று வெளியிட்டிருக்கின்றனர். தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் இருக்கின்ற விவரங்களின் அடிப்படையில்தான் கிராம ஊராட்சி வார்டு வாரியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்க படுகின்றது. அதன்பின்னர் கிராம ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அந்தந்த ஊராட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வரும் 30 ஆம் தேதி அன்று வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது.

முன்னரே அறிவிக்கப்பட்ட சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் தங்களுடைய பெயர்களை ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் இடம்பெற செய்ய வேண்டும் என்றால் உடனடியாக அவர்கள் தொடர்புடைய சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் அவர்களுடைய பெயர்களை சேர்க்க வேண்டும். அதற்காக அவர்கள் தொடர்புடைய சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலகம் சென்று பொதுமக்கள் தங்களுடைய பெயர்களை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புதிதாக இணைக்கப்படும் வாக்காளர்களின் பெயர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடர்பு இருக்கும் சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின்னர்தான் உள்ளாட்சி அமைப்புகளுக்கான கிராம ஊராட்சி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலில் தொடர்பு இருக்கும் ஊரக உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்கள் சேர்க்கப்படும் என்று சொல்லப்படுகிறது.ஆகவே அவர்களுக்கு தொடர்புடைய சட்டசபை வாக்காளர் பதிவு அலுவலக அலுவலர்களை தொடர்பு கொண்டு பெயர் சேர்க்கை முகவரி மாற்றம் உள்ளிட்ட மிக தேவையான திருத்தங்களை செய்து பயனடையுமாறு வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் பெயர் சேர்க்க மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அவகாசம் ஆகஸ்ட் மாதம் 28 மற்றும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகள் அதிலும் 29 தேதி ஞாயிற்றுக்கிழமை இருப்பதால் மீதம் இருக்கும் இரண்டு தினங்களில் விடுபட்ட வாக்காளர் தங்களுடைய பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.