அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! இதை முகநூல், வாட்ஸ் அப்பில் பகிர்ந்தால் சஸ்பெண்ட் நிச்சயம்!

0
261
Social media
Social media

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட வேண்டியுள்ளதால் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் தபால் ஓட்டு செலுத்தும் பணி கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள பள்ளி ஆசிரியை ஒருவர் தன்னுடைய தபால் வாக்கினைபுகைப்படம் எடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என வைத்தது சர்ச்சையை கிளப்பியது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளியில் தெரிவிக்க கூடாது என்பது சட்டமாக உள்ள நிலையில், தன்னுடைய வாக்கை போட்டோ எடுத்து ஆசிரியை ஒருவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பழனிநாடார் புகார் அளித்தார்.

ஆசிரியை இப்படி சோசியல் மீடியாவில் தன்னுடைய வாக்குப்பதிவை பகிர்ந்து கொள்வது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால், அந்த ஆசிரியை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளருக்கு வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது தபால் வாக்குகளை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் எதையும் வைக்காதீர்கள் எந்த ஒரு முகநூல் பக்கத்திலும் பதிவிட வேண்டாம் என எச்சரிக்கைப்பட்டுள்ளனர்.

Previous articleஇந்த ராசிகாரர்களே பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!
Next articleடிடிவி. தினகரன் தொகுதி மாறியதன் ரகசியம் என்னவென்று தெரியுமா?