ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!

0
138

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் என அரசு ஊழியர்களை விளாசிய ஐகோர்ட்!

சட்டவிரோதமாக பணி அமர்த்தப்பட்டுள்ள மாணவிகளை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரபாகரன்,வேலுமணி இருவர் முன்னிலையில் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல பணத்திற்கு ஆசைப்பட்டு ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இந்த கொரோனா காலத்தில் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் E-PASS வழங்குவதற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு தக்க தண்டனை கொடுத்து இரும்புக்கரம் கொண்டு கைது செய்யப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்து, தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம், ஊழல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் இ-பாஸ் வழங்க ரூ.500 முதல் ரூ.2000 வரை லஞ்சம் வாங்கப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து உள்ளது.

அதேபோல மீட்கப்பட்ட மாணவிகளை குழந்தைகளின் நலக் குழு மூலம் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Previous articleஅத்துமீறி நுழைந்தவரை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்
Next articleகோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் சிவிஆர் கருவி கண்டுபிடிப்பு?