அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

Delhi: காற்று மாசுப்பாட்டு காரணமாக 50% அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் படி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

காற்று மாசுப்பாடானது டெல்லியில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் காற்று மாசானது அதன் தரக்குறியீட்டில் 450 ஆக ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. வானமெங்கும் மேகமூட்டத்துடன் புகையாகவே உள்ளது. இதனை தடுக்க அம்மாநில அரசு கனரக வாகனங்களுக்கு தடை விதித்துள்ளனர். குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுள்ளனர்.

மேற்கொண்டு ட்ரக் எடுத்துவரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒரு குறிப்பிட்ட வகை பெட்ரோல் வண்டிகளையும் உபயோகிக்க கூடாது என கூறியுள்ளனர். இவ்வாறு காற்று மாசுபாடு உள்ள நிலையில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் எடுக்கபட்டு வருகிறது. தற்பொழுது அரசு ஊழியர்களையும் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த அறிவிப்பு அனைவருக்கும் பொருந்தாது.

50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பானது பொருந்தும் என தெரிவித்துள்ளனர். இதன் அறிவிப்பை அம்மாநில அமைச்சர் கோபால் ராய் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி டெல்லிக்கு செல்லும் குறிப்பிட்ட விமானம் மற்றும் இரயில் சேவைகளையும் ரத்து செய்துள்ளனர். எந்த அளவிற்கு காற்று மாசு உள்ளதோ அதே அளவிற்கு மேகமூட்டம் காணப்படுவதால் விமானங்கள் பழைய முறைக்கு இயங்க தாமதமாகும் என கூறியுள்ளனர்.