அரசு விரைவு பேருந்து டமால்! சேலத்தில் நடந்த கோர விபத்து!

Photo of author

By Sakthi

அரசு விரைவு பேருந்து டமால்! சேலத்தில் நடந்த கோர விபத்து!

Sakthi

தலைநகர் சென்னையிலிருந்து 42 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் இயக்கி வந்தார். இவரும் நடத்துனராக வேலைபார்க்கும் சீனிவாசன் என்பவரும் மாறி,மாறி, பேருந்தை ஓட்டி சென்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அதிகாலை 5 மணியளவில் சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அருகேயிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தத சமயத்தில் அந்தப் பகுதியில் இருப்பது இரு வழி சாலை என்ற காரணத்தால், எதிரே வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக பேருந்தை ஓட்டிச் சென்ற சீனிவாசன் இடப்புறமாக திரும்பியிருக்கிறார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் சீனிவாசன், பணிகளான அய்யனார், ஜமுனா, சந்தோஷ், புனிதா, உட்பட 23 பேர் படுகாயமடைந்தவர்கள். மேலும் 19 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுதொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்கள்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான பேருந்தை காவல்துறையினர் பளுத்தூக்கும் இயந்திரத்தின் உதவியுடன் மீட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையைச் சார்ந்தவர்கள் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.