திறனாய்வு தேர்வு! 3000க்கும் அதிகமான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

0
72

தமிழ்நாடு முழுவதுமிருக்கின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்கள் படிப்பு செலவிற்காக தமிழக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது.

அந்த நிதி உதவியைப் பெறுவதற்காக திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் 1250 ரூபாய் வீதம் 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலும், முதுகலை மற்றும் இளங்கலை படிப்பு வரையில் 2000 ரூபாய் வீதம் கல்வி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

அதன்பிறகு 2021 மற்றும் 22 உள்ளிட்ட கல்வி ஆண்டுக்கான தேசிய திறனாய்வு தேர்வு பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் 40,89 பேர் விண்ணப்பம் செய்திருந்தார்கள்.

இதில் இவர்களுக்காக 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது இதனை தொடர்ந்து தேர்வு நடைபெறுமன்று மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களுக்கு சென்றிருந்தார்கள்.

அங்கே அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அதன் பிறகு தொடர்ந்து 9 மணியளவில் முதல்தாள் தேர்வு ஆரம்பமானதால் இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதியிருக்கிறார்கள். மேலும் 11 மணி வரையில் நடைபெற்ற முதல் தாள் தேர்வுக்கு பின்னர் இடைவேளை விடப்பட்டு 2ம் தாள் தேர்வு தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை இந்த மாவட்டம் முழுவது3,945 மாணவர்கள் எழுதியிருக்கிறார்கள்.