அரசாங்கம் வழங்கும் இலவச மாட்டுக் கொட்டகை பற்றி தெரியுமா?
கிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்றவர் மகாத்மா காந்தியடிகள்.உள்ளாட்சிகள் சயசார்புடைமை பெற்றால் மட்டுமே இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற முடியும் என்றும் உறுதியாக நம்பியவர் மகாத்மா.
ஆனால் இன்றைக்கு கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிய வண்ணம் உள்ளனர்.இதற்கான காரணம் கிராமங்களில் உள்ள விவசாயத்தில் இலாபம் இல்லாமையே.அதனால் கிராமப்புற விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்க ஆடுகள்,கோழிகள்,மாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் கூடுதல் பெற வேண்டிய சூழலில் உள்ளனர்.
அவ்வாறு ஒரு கூடுதல் வருமானம் அவர்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் விவசாயம் பொய்த்துப் போகும் காலங்களில் கூட அவர்களால் சற்று பொருளாதார சுமையை சமாளிக்க முடியும்.இதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய மாநில அரசுகள் வகுத்த செயல்படுத்திவருகிறது.
ஆனால் இதைப்பற்றிய தகவல்களை கிராமப்புற மக்களுக்கு கொண்டுசெல்வதில் பிரச்சனை உள்ளது.அவ்வாறு மக்கள் அறியாமலே உள்ள திட்டங்களில் ஒன்றே இலவச மாட்டுக்கொட்டகை திட்டம்.
இத்திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் 2,3,5,9 மாடுகள் என பல்வேறு வகையில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஊரக வேலைவாய்ப்பு உறுத்தித்திட்ட அட்டை வைத்திருக்க வேண்டும்.அவரது பெயரிலேயே கொட்டகை அமைக்க தேவையான நிலம் இருத்தல் அவசியம்.
இத்திட்டத்தில் பயன் பெற மகளிர் சுய உதவிக்குழுக்ளையோ , ஊராட்சி மன்ற தலைவரையோ , அரசு கால்நடை மருத்துவரையோ அல்லது நேரடியாக திட்டங்கள் தொடர்பான வட்டார வளர்ச்சி அலுவலரையோ (scheme BDO),ஆவின் பால் சங்கத்தையோ அனுக வேண்டும்.
இரண்டு மாடு கொட்டகை அமைக்க ₹98,500 , மூன்று மாடுகள் தங்கும் கொட்டகைக்கு 1,20,000 என பல்வேறு விதங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுபோல் அதிகபட்சம் ரூபாய் பத்துலட்சம் வரை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.இத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் செயல்படுத்தப்படுகிறது.
இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தும் போது உரிய விழிப்புடன் இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் வாழும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகுக்கும்.