கூட்டுறவு வங்கிகளில் பயனாளர்களை அதிகரிக்க அரசு எடுத்த முடிவு!! ரேஷன் கடைகளில் வரப்போகும் மாற்றம்!!

Photo of author

By Vijay

கூட்டுறவு வங்கிகளில் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.  இது தொடர்பாக கூட்டுறவு பதிவாளர் என்.சுப்பையன் அவர்கள், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனருகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதில்  பிற பொது   வங்கிகளில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் அரசு திட்டங்கள் பொதுமக்களை சென்று அடைவது போன்று,  மத்திய கூட்டுறவு வங்கிகளை மாற்ற  அரசு நடவடிக்கையை  மேற்கொண்டு வருகிறது.

இதற்காக கூட்டுறவு வங்கிகளில் பயனாளர்களை அதிகரிக்க, கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடை பயனாளர்களை கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வைக்க வேண்டும்.  அதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு விண்ணப்பங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இந்த விண்ணப்பங்களில் ‘கே.ஒய்.சி ‘ விவரங்களை  ரேஷன் கடை ஊழியர்கள் மூலம்  பூர்த்தி செய்ய வேண்டும்.

அந்த வகையில் சேமிப்பு கணக்கு தொடங்கினால், ஒரு சேமிப்பு கணக்குக்கு  5 ரூபாய்  ஊக்கத்தொகையாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படும். மேலும் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் , கடன் திட்டங்கள்,  நிரந்தர வைப்பு திட்டம், மின்னணு பரிவர்த்தனை கையேடுகள், ஏ.டி.எம்  கார்டுகள் போன்றவை  எளிதில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும். இந்த செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் கூட்டுறவு பதிவாளர் என்.சுப்பையன்.