Breaking News, State

தீபாவளிக்கு முன் தினமும் அரசு விடுமுறை.. வரப்போகும் மாஸ் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

தீபாவளி என்றாலே மக்கள் அனைவருக்கும் கோலாகலமான கொண்டாட்டம் , இதில் தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை என்று அறிவித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மக்கள் ஏன் தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை வேண்டும் என்று கேட்பதன் காரணம் அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள் .

அப்பொழுது அனைவரும் செல்ல போக்குவரத்து வசதி கிடைப்பது இல்லை. இதனை காரணமாக கொண்டு ஏற்கனவே தமிழக அரசு தீபாவளி அன்று (வியாழக்கிழமை), வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.  இதனால் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் இதர நிறுவனங்கள்  என அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

மேலும் தமிழக அரசு நவம்பர் 1 அன்று விடுமுறை அளித்ததை எண்ணி   நவம்பர்- 7 (சனிக்கிழமை) வேலை நாட்களாக செயல்படும் என தெரிவித்துள்ளது. இப்பொழுது தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30-ம் தேதி விடுமுறை அளிக்க சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர்  கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைக்கு காரணம் மக்கள் அனைவரும் தீபாவளிக்கு வீட்டுக்கு செல்ல போக்குவரத்து ஒரு காரணமாக அமைய கூடாது என எண்ணி முந்தைய நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர் . அரசு இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் என மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

தவெக மாநாட்டிற்கு இவர்களெல்லாம் கட்டாயம் வரக் கூடாது!! ஸ்ட்ரிட் ஆர்டர் போட்ட விஜய்!!

இந்தியா தோல்விக்கு இவர்கள்தான் காரணம்?? சுட்டி காட்டிய தினேஷ் கார்த்திக்!!