2021 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பொதுத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில்,
2021 ஆம் ஆண்டில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டில் உள்ள அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.
பொது விடுமுறை நாளாக கருதப்படும் ஞாயிற்றுக்கிழமைகளுடன், இந்த 23 நாட்களும் 2021 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வங்கிகளுக்கான ஆண்டுக்கணக்கு முடிவு நாளான ஏப். 01ம் தேதி தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், 2021 ஆண்டில் கொண்டாடப்படும் உழவர் திருநாள், மகாவீர் ஜெயந்தி, மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய 6, அரசு விடுமுறை நாட்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.