அரசு மருத்துவமனையில் தீ! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்!

Photo of author

By Hasini

அரசு மருத்துவமனையில் தீ! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்!

Hasini

Government hospital fire! People who died miserably!

அரசு மருத்துவமனையில் தீ! பரிதாபமாக உயிரிழந்த மக்கள்!

மராட்டிய மாநிலத்தில் உள்ள அகமது நகர் அருகே அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் புறநோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அங்கு இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் 11 பேர் பலியானார்கள் என்றும், 12 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசர சிகிச்சை பிரிவின் சிகிச்சை பிரிவில் பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதன் காரணமாக 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அருகில் உள்ள மற்ற வார்டுகளுக்கும் தீ பரவாத நிலையில் முயற்சிகள் மேற்கொண்டனர்.

தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மற்ற நோயாளிகளை வெளியேற்றும் முயற்சியிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். உயர் போலிஸ் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு பார்வையிட்டனர். இருந்தபோதிலும் இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

எனவே அதிகாரிகள் இதை பற்றி அறிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.