அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! இந்த மாதமே குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறை!
தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலின் பொழுது திமுக கட்சி பல்வேறு வகையான வாக்குறுதிகளை அளித்தது.அதில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கப்படும் ,குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ 1000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதி கூறப்பட்டது.
எதிர்பார்த்ததை போலவே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.மேலும் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு அதிகமாகி வருகின்றது.
ஆனால் தமிழகத்தின் நிதி நிலைமையை சரி செய்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால் கடந்த வாரம் புதுச்சேரி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் ஜனவரி 23 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து தமிழகத்தில் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 ரூபாய் வழங்குவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.