பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் மாஸ் அறிவிப்பு!!ரூ 5000 பெற உடனே இதை விண்ணப்பியுங்கள்!!

Photo of author

By Rupa

தமிழக அரசு தற்பொழுது மாணவர்களுக்கு 5000 ரூபாய் வரையிலான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது எதற்கு என்பது குறித்தும் அதை பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.
அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் பிறந்த தினங்கள் அடுத்து வரவுள்ள நிலையில் இதை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா மற்றும் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்படவுள்ளதாகவும் இந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு 5000 ரூபாய் வரையிலான பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுத் தொகையை வெல்ல விருப்பம் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பள்ளி தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று கலந்து கொள்ளலாம். இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் “2021 மற்றும் 22ம் ஆண்டுக்குரிய மானியக் கோரிக்கையின் அறிவிப்பின் படி அண்ணா மற்றும் பெரியார் ஆகியோரின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுப் போட்டி வரும் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.
அறிஞர் அண்ணா பிறந்த நாளில் வாய்மையே வெல்லும் என்ற பல்வேறு தலைப்புகளின் கீழும், பெரியார் அவர்களின் பிறந்த நாளில் வைக்கம் வீரர், பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள், பெரியாரும் பெண் விடுதலையும் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழும் பேச்சுப் போட்டி நடைபெறுகின்றது.
இந்த பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 5000 ரூபாய் வரையிலான பரிசுத் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். அதாவது பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு 5000 ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு 3000 ரூபாயும் மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவன் அல்லது மாணவிக்கு 2000 ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
அது மட்டுமில்லாமல் அரசு பள்ளி மாணவர்களில் இரண்டு பேருக்கு சிறப்பு பரிசு ஒன்றும் உள்ளது. அதாவது இரண்டு மாணவர்களுக்கு தலா 2000 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.
எனவே இந்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் கல்லூரி கல்வி இணை இயக்குநர் மூலமாக அனுப்பப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த கல்லூரி முதல்வரிடம் கொடுக்க வேண்டும்.
அதே போல தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் அனைவரும் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அனுப்பப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கொடுத்து இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.