தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பலன் பெற விண்ணப்பிப்பது எப்படி? விவரம் இதோ!

0
102
Government of Tamil Nadu Gold Scheme for Tali
Government of Tamil Nadu Gold Scheme for Tali

தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பலன் பெற விண்ணப்பிப்பது எப்படி? விவரம் இதோ!

தமிழக அரசு பெண்களின் நலன் கருதி அவர்களின் திருமணத்தின்போது தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தகுதியான நபர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் தகுதிகள் உள்ளிட்டவைகள்  குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தாலிக்கு தங்கம்:

தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மாணவர்களிடம் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக ஊக்கத்தொகை மற்றும் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை என பல திட்டங்களை வழங்கி வருகிறது.அதே போல பெண்களின் நலன் கருதியும் அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தமிழக அரசு பவேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்:

அந்தவகையில் தான் ஏழை பெண்களின் நலனுக்காக அவர்களின் திருமணத்தின்போது தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை பெண்களின் திருமணத்துக்கு நிதி உதவியுடன் அவர்களின் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கபடுகிறது.

அதாவது 10 ஆம் வகுப்பு வரை படித்த மணப் பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.25,000 மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கபடுகிறது. அதேபோல், 12 வது மற்றும் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு ரூ.50,000 உதவித் தொகை மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய ஏழை பெற்றோர்கள் அவர்களின் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவும் வகையில் இந்த திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் நிபந்தனைகள்:

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 க்கு குறைவாகவும்,சம்பந்தப்பட்ட மணமகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்த நிலையிலும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அவர்களின் ஆதார் கார்டு, 10 வது, 12 வது, பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், டிரான்ஸ்ஃபர் சான்றிதழ், சமூக சான்றிதழ், வருமான சான்றிதழ், ரேஷன் அட்டை நகல், திருமண அழைப்பிதழ் நகல், விண்ணப்பதாரர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவைகளுடன் திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleஇனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை
Next articleஇன்றைய (10-10-2021) ராசிபலன்கள்.!! யாருக்கு அதிர்ஷ்டம்.!! யாருக்கு வெற்றி.!!