தமிழ் எழுதப் படிக்க தெரிந்தால் போதும்!! அரசு அறிவித்த சூப்பர் வேலை!!

Photo of author

By Sakthi

TN Govt Jobs:தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது தமிழக அரசு.

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார திட்டத்தின் உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதாவது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், அரசு இராசா மிராசுதார் மருத்துவமனை மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணிகளை செய்ய ஒப்பந்தம் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப் பட்டுள்ளன.

இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியில் நியமிக்கப்படுபவர்கள்  11 மாதங்கள் பதவி  காலமாக இருக்கும். அதன் பின்னர் திறமை அடிப்படையில் பதவி காலம் நீட்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது முதுநிலை  காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்,
ஆய்வக நுட்புநர், காசநோய் சுகாதார பார்வையாளர் ஆகிய பணிகளுக்கு தலா ஒருவர் வீதம் மூன்று காலிப்பணியிடங்கள் உள்ளது.

இப் பணிக்கு வயது வரம்பு 65 க்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் பணிக்கு மருத்துவ துறை சார்ந்த பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். ஆய்வக மேற்பார்வையாளர் பணிக்கு ஆய்வகம் தொடர்பான பட்டம் அல்லது டிப்ளமோ  முடித்து இருப்பது கல்வித்தகுதியாக உள்ளது.

காசநோய் சுகாதார பார்வையாளர் பணிக்கு  பட்டம் அல்லது 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவை ஒரு பாடமாக படித்து இருக்க வேண்டும். மருத்துவ துறை அனுபவம் உடையவர்களுக்கு முன்னுரிமை. இப் பணிக்கு விண்ணப்பிக்க https://thanjavur.nic.in/ என்ற இணையதளத்தில்  விண்ணப்பதாரர்கள் விண்ணபிக்க வேண்டும். இப் பணிக்கு தகுதியானவர்கள்  நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விண்ணப்பிக்க 23.11.2024 கடைசி நாளாக உள்ளது.