கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு!

Photo of author

By Rupa

கலப்பு திருமணம் செய்தவர்களா? இனி உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்காது! தீர்த்து வைத்த தமிழக அரசு!

இக்கால கட்டத்தில் சாதிகள் இல்லை என்று கூறினாலும் அதன் தொடர்பான பிரச்சனைகள் வந்த வண்ணமே உள்ளன.அதில் ஒன்றான கலப்பு திருமணம் செய்தவர்கள் அவர் குழந்தைகளின் சாதி சான்றிதழில் எவ்வாறு சாதிகளை குறிப்பிடுவது என கோரிக்கைகள் பல காலமாக இருந்து வருகிறது.இந்த பிரச்சனைகளுக்காண   தீர்வினை தமிழக அரசு அளித்துள்ளது.

கலப்புத்திருமணம் செய்தவர்கள் அவர்களது குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் சாதியை குறிப்பிட்டு சாதி சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.இதனையடுத்து மாநில அரசின் உத்தரவின் படி இதுகுறித்த அறிவிப்புகளை  அறிவித்துள்ளன.மேலும் இதுகுறித்த வழிகாட்டு செயல்முறைகளை வெளியிட வருவாய் நிர்வாக ஆணையர்  தமிழக அரசிடம் கேட்டுள்ளதாக அதன் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.