கொரோனா பெருந்தொற்று ஒரு பேரலை போல் உலகையே உலுக்கி கொண்டிருக்கிறது. என்னதான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா இன்னும் முற்றிலுமாக அழியவில்லை.
உலக அளவில் இதுவரை 21.9 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 45.5 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 4.46 கோடி பேர் பாதிக்கப்பட்டு 4.51 லட்சம் பேர் இறந்துள்ளனர். இந்தியாவில் 3.4 கோடி பேர் பாதிக்கப்பட்டு 4.51 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 65.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.4 லட்சம் பேர் இறந்துள்ளனர். தமிழ்நாட்டில் 26.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 35,814 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் 48.1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 26,448 இறந்துள்ளனர்.
தற்போது கொரோனாவால் இறந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்கும் வகையில் கேரளா அரசு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.
அந்த திட்டத்தின்படி கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் 5000 ரூபாய் என 3 வருடத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது.
ஒருவர் எந்த மாநிலத்தில், நாட்டில் இறந்தாலும் கேரளாவில் கூடியவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த திட்டம் பொருத்தும்.