போலி போலீஸ் நடத்திய அரசு வேலை நாடகம்:! கோடிக்கணக்கில் பணம் கொள்ளை! பணத்தை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் பிஇ பட்டதாரிகள்!

Photo of author

By Pavithra

போலீஸ் உடை,போலீஸ் கார், கையில் துப்பாக்கி,என காவல் ஆணையர் அலுவலகம் முன்பு கம்பீரமாக உலா வந்து,அரசு வேலை வாங்கித் தருவதாக,பட்டதாரிகளை ஏமாற்றி கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் காளிதாஸ்.இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.இவரிடம் மதுரை மேல்பொனாகரத்தைச் சேர்ந்த சக்திவேல் பாண்டிராஜன் என்பவர்,மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிகாரியாக பணி புரிவதாகவும்,தனது மனைவி காமேஸ்வரி என்பவர், மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாரியாக வேலை பார்ப்பதாகவும் கூறி,காளிதாஸ்யிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவருக்கும்,காவல் ஆணையர் அலுவலகத்திலோ,மின்சார வாரியத்திலோ அல்லது கோவிலிலோ வேலை வாங்கி தருவதாக கூறி 5 லட்சம் பணத்தை பெற்றுள்ளார்.

இவரைப் போன்றே பத்திற்கும் மேற்பட்ட நபர்கள்,அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு வேலைக்காக காத்திருந்தனர்.
ஆனால் பணம் வாங்கி 10 மாதங்கள் ஆன நிலையிலும், காளிதாசன் உள்ளிட்ட 10 நபர்களுக்கு, வேலை வாங்கி தரவில்லை.இதனால் அவர்கள் இந்த விஷயமாக பேச,சக்திவேல் பாண்டியராஜன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.வேலையைப் பற்றி கேட்ட பிறகு போலியான அரசு முத்திரை பதித்த உத்தரவு நகல்களை அவர் கொடுத்துள்ளார்.மேலும் உடனடியாக வேலை வேண்டும் என்றால் மேலும் பணம் தர வேண்டியதாயிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் சக்திவேல் பாண்டியராஜனை பற்றி விசாரித்தப்போது,அப்படி ஒரு நபர் இங்கு யாரும் வேலை பார்க்கவில்லை என்று காவல் ஆணைத்திலிருந்து கூறும் பொழுது தான் அவர்கள் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.

தற்போது சக்திவேல் பாண்டியராஜன் மீது 10 பேருக்கும் மேல் காவல் ஆணையத்தில் புகாராளித்திருக்கின்றனர்.
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,எங்களைப் போலவே பல நபர்கள் இதுபோன்று ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும் இதன் மூலம் பல கோடிகளை கொள்ளையடித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் சக்திவேல் பாண்டியராஜன்,காவல் என எழுதிய காரிலும், காவல் உடையிலும்,துப்பாக்கியுடனும் காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக அவர்களை அழைத்து பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.காவல் ஆணையர் அலுவலகம் முன்பு காக்கி உடை,போலீஸ் கார் என வலம் வந்த சக்திவேல் பாண்டியராஜன் பின்னால்,இன்னும் நிறைய பேர் இருப்பார்கள் என்று சந்தேகிக்கிறது காவல்துறை வட்டாரம்.

மேலும் சக்திவேல் பாண்டியராஜன் என்பவரும் அவருடைய மனைவியும் தலைமறைவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கின்றனர்,தனது திறமையை நம்பாமல்,வேலைக்காக பணம் கொடுத்தால்,இப்படித்தான்
ஏமாறும் நிலை ஏற்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளனர்.