அரசின் புதிய திட்டம்: வீடு வாங்க விருப்பமா? இப்போதே விண்ணப்பியுங்கள்!!

ஏழை மற்றும் நடுத்தர வருமானத்தைச் சேர்ந்த மக்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவு. கனவை நனவாக்கும் நோக்கில், மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா.இந்த திட்டமானது  2015ஆம் ஆண்டில் பாஜக அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு பிரிவுகள் உள்ளன.

மேற்கொண்டு வீடு கட்டுவதற்கான மானியமாக ரூ.2.5 லட்சம் வழங்கப்படும். அதிலும் நிலம் கூட இல்லாதவர்கள் அரசால் கட்டப்படும் மலிவு விலையில் கொடுக்கப்படும் வீடுகளைக் வாங்கிக்கொள்ளலாம்.  அதுமட்டுமின்றி வீட்டு கடன்களுக்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமும் வழங்கப்படுகிறது.

இதற்கடுத்து 2024ஆம் ஆண்டில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற 2.0 திட்டம் தொடங்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தில், நகர்ப்புறங்களில் வசிக்கும் EWS அதாவது (வருமானம் ரூ.3 லட்சம் வரை), LIG (ரூ.3-6 லட்சம்), மற்றும் MIG (ரூ.6-9 லட்சம்) வருமானக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

அதிலும் இந்த திட்டத்திற்கு விதவைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், தனியாக வாழும் பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர், தெரு வியாபாரிகள், மற்றும் கைவினைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு தான் முன்னுரிமை என்று கூறியுள்ளனர்.

எப்படி விண்ணப்பிப்பது??

விண்ணப்பிக்க விரும்புவோர் PMAY-U இணையதளத்தில் “Apply PMAY-U 2.0” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்பு தேவையான ஆவணங்களைத் தயார் செய்து, அதில் கேட்கும் தரவுகளை சரியாக கொடுக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை

வங்கி கணக்கு விவரம்

வருமானச் சான்றிதழ்

நில ஆவணம் (இருப்பின்)

இவையனைத்தையும் வைத்து எளிதாக இந்த மத்திய அரசின் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமின்றி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டு கனவுக்கு நிதி உதவியாக இருக்கும்.