கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் ஆளுநர்!

0
192

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குணமடைந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன் ஆளுநர் மாளிகையில் 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 28-ஆம் தேதி முதல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதனிடையே சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தற்போது குணமடைந்துள்ளார் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Previous articleசொத்துக்கு ஆசைப்பட்டு குடும்பத்தினர் அனைவரையும் கொல்ல முயன்ற இளைஞன்
Next articleசுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்கார் நாயகனின் புது முயற்சி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here