இணையதள சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்திருந்ததால் தொடர்வண்டி முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் திருச்சி மாவட்டம் மலையாண்டி பட்டி கிராமத்தைச் சார்ந்த சந்தோஷ என்ற பொறியியல் மாணவர் இணையதள சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர் வண்டி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனை வழங்குகிறது. அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம் மலையாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.(1/5)#GamblingKills
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) October 7, 2022
மேலும் இணையதள சூதாட்டத்திற்கு முந்தைய ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட பிறகு இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட 29வது மரணம் இதுவாகும்.
இணையதள சூதாட்டத்திற்கு எதிராக பாமக நடத்தி வரும் தொடர் போராட்டத்தின் காரணமாக இணையதள சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் 26 ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. அதே வேளையில் ஆளுநரும் இந்த சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் வழங்கியிருந்தால் இந்த தற்கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இணையதள சூதாட்டத்திற்கு இன்னொரு நபர் பலியானால் அதற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பாகவே நான் தெரிவித்திருந்தேன். அதனை ஆளுநர் மாளிகை பொருட்படுத்தாமல் இருந்ததால்தான் தற்போது இந்த இணையதள சூதாட்டத்திற்கு இன்னொரு இளைஞரின் உயிர் பறிபோய் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இணையதள சூதாட்டத்திற்கு இனிவரும் காலங்களில் எவரும் உயிரிழக்க கூடாது அதனை கருத்தில் வைத்து அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ள இணையதளம் போராட்ட தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்