மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி! ஆளுனர் அழைப்பால் கதிகலங்கிய சிவசேனா

Photo of author

By Parthipan K

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி! ஆளுனர் அழைப்பால் கதிகலங்கிய சிவசேனா

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது,. இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சரும் தற்போதிய பாஜக சட்டமன்ற தலைவருமாகிய தேவேந்திர பட்னாவிஸ்ஸை மீண்டும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது,.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் பாஜக 105 இடங்களிலும் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சிவசேனா கட்சி 56 இடங்களிலும் வெற்றி பெற்றது,. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் முதலமைச்சர் பதவியை தங்களுக்கு வேண்டும் என்று அடம் பிடித்து வருகிறது சிவசேனா கட்சி,. இதற்கு பாஜக மேலிடம் ஒப்புக்கொள்ளவில்லை,. ஆட்சியில் வேண்டுமானால் சரிசமமாக பங்கு தர ஆய்வு செய்யப்படும்,. ஆனால் முதலமைச்சர் பதவி தர முடியாது என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டது பாஜக தரப்பு,.

இந்த சூழ்நிலையில் சிவசேனா தரப்பு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி ஆட்சி அமைத்து முதலமைச்சர் பதவியை அடைந்து விடலாம் என்று எண்ணியது,. ஆனால் இதற்கு தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவுக்கு ஆதரவு தர மறுத்துவிட்டது, மக்கள் எங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமரதான் வாக்களித்தார்கள் தவிர ஆட்சியில் அமர வாக்களிக்கவில்லை என்று அதன் தலைவர் சரத்பவார் வெளிப்படையாக பேசியது சிவசேனா கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது,.

இத்தகைய சூழ்நிலையில் நேற்று முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார்,. இன்றுடன் சட்டமன்ற ஆயுட் காலம் முடிவடைய உள்ளதால் விரைவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று அனைவரும் எண்ணிய நிலையில் சட்டமன்றத்தில் அதிக பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் பாஜகவிற்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது,.

இது மிகப்பெரிய தவறுதலான அரசியல் பார்வையை கொண்டு வந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,. எதிர்க்கட்சிகளும் இவ்விவகாரத்தை தேசிய அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக வெடிக்கச் செய்ய தயாராகி வருகின்றன.