தமிழ்நாடு சர்ச்சை… ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம்..!

0
318

தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என ஆளுநர் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

2023 ஜனவரி 4ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், சமீபத்தில் நிறைவடைந்த “காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாசார தொடர்பை கொண்டாடும் ஒரு மாத காசி- தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் வரலாற்றுப்பண்பாடு பற்றி பேசும் போது

காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்று பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்.

எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அல்லது அனுமானம் செய்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது”எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை’ எனும் வாதங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

Previous articleபொங்கல் பண்டிகை விடுமுறை நிறைவு! முண்டியடித்து பேருந்தில் இடம் பிடிக்கும் மக்கள்!
Next articleஇபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கான மாஸ் அப்டேட்…இனி உங்களுக்கு இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கப்போகிறது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here