போராட்டமா நடத்துறிங்க…!ஆக்‌ஷனில் இறங்கிய ஆளுநர் மாளிகை…!

Photo of author

By Sakthi

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது அரசினர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரி தமிழக ஆளுநர் மாளிகை முன்பு இன்று காலை ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கனிமொழி டி ஆர் பாலு மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்த நிலையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் செய்ததாக கூறி ஸ்டாலின் உள்பட 3,600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.