குடியரசு தலைவர் மாளிகையின் நடைமுறைகளை மீறும் ஆளுநர்கள்!

0
190

ஒரு மாநில ஆளுநராக இருப்பவர் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு முன்னர் குடியரசுத் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் சிறப்பு பிரிவு செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

நடைமுறைகளின் படி ஒரு மாநில ஆளுநர் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செல்ல முடியும். ஆனால் பெரும்பாலான ஆளுநர்கள் இதனை பின்பற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. சில ஆளுநர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அனுமதி கூட கேட்பதில்லையாம்.

தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அடிக்கடி தன்னுடைய சொந்த மாநிலமான தமிழகத்திற்கு வந்து செல்கிறார். கோவா மாநில ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளையும் அடிக்கடி கேரள மாநிலத்திற்கு பயணம் ஆகிறார். அந்த வரிசையில் உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல் தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்திற்கு பலமுறை சென்றுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தன்னுடைய சொந்த மாநிலமான பீகார் மாநிலத்திற்கு சமீபத்தில் பலமுறை சென்று வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தன்னுடைய மகள் திருமணத்திற்காக ஏற்பாடுகள் செய்வதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க கோபமானில் ஆளுநர் பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை சத்தமே இல்லாமல் புதியதொரு சாதனையைப் படைத்துள்ளார். அவர் கோவாவில் இருக்கின்ற 641 கிராமங்களில் 90 சதவீத கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்புகள் குறித்து அதில் ஏற்பட்ட அனுபவங்கள் தொடர்பாக ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கு அவர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleதீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை பெற்றோர்கள் கோரிக்கை! பரிசீலனை செய்யுமா தமிழக அரசு?
Next articleகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல்