அரசின் அதிரடி!!சைக்கிள் ஓட்டும் போது போன் பேசினால் சிறை!!

Photo of author

By Jeevitha

ஜப்பானில் உள்ள மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். அந்த நிலையில் சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. அதாவது கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் சுமார் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துகள் பதிவாகி உள்ளன. இதை தடுக்கும் வகையில் ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும் போது செல்போனில் பேசினாலோ, அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தினாலோ 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது அதிக விபத்துகளை ஏற்படுத்துகிறது. மேலும் ஜப்பான் அரசு இதை கருத்தில் கொண்டு விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அது மட்டும் அல்லாமல் 6 மாத சிறை தண்டனையை ஏற்காமல் போனால் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் மது அருந்திவிட்டு சைக்கிளை ஓட்டினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இல்லையென்றால் “இரண்டே முக்கால் லட்சம்” அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஜப்பான் மக்கள் மிதிவண்டியை அனைத்து செயல்பாட்டிற்கும் பயன்படுத்துவார்கள். அதாவது பள்ளி, கல்லூரி, சந்தை என அனைத்திற்கும் பயன்படுத்துவதால் அதிக விபத்துகள் சில நாட்களாக நிகழ்ந்தால் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது ஜப்பான் அரசு. ஒரு நொடி கவன சிதறல் உயிரையே பறிக்கும் என்பதை மக்கள் தெரிந்தும் கூட இதுபோன்ற அலட்சியமான செயல்களில் தொடர்ந்து வருகின்றனர். இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க ஜப்பான் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.