தடையை மீறி திமுக பிரமுகர் செய்த காரியம் : அதனால் நேர்ந்த பரிதாபம்!

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். மேலும் இது போன்ற இக்கட்டான தான் நாம் கவனமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாம் கொடிய வைரஸுக்கு எதிரான போரில் வெல்ல முடியும் என்று கூறினார்.

இதற்கு முன்னதாக முதல்வர் பழனிசாமி தன்னார்வலர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் நிவாரண பொருட்களை வழங்குவதற்கு கடும் நிபந்தனைகளை விதித்திருந்தது. இவ்வாறு நிவாரண பொருட்கள் வழங்கும் போது வைரஸ் பரவ அதிகம் வாய்ப்புள்ளதால் இவ்வாறு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இவ்வாறு தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் மீதும் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் திருநெல்வேலி ராதா புரத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஜெகதீஷ் அரசு உத்தரவை மீறி பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். கொரோனா தொற்று அபாயம் உள்ள நிலையில் அரசின் உத்தரவை மீறி ஜெகதீஷ் இவ்வாறு செய்தது பலரை அதிருப்தியில் ஆழ்த்தியது.

இந்த தகவலை அறிந்து நெல்லை திசையன்விளை காவல் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள், நிவாரணப் பொருட்களை பறிமுதல் செய்து ஜெகதீஷையும் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். திமுகவை சேர்ந்த அரசியல் பிரமுகர் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.