மதுராந்தகம் அருகே லாரியின் மீது அரசு பேருந்து மோதி கோர விபத்து!விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் சரக்குடன் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் வந்து கொண்டிருந்த சிதம்பரம் செல்லும் அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த லாரியின் மீது ஒரு பக்கமாக மோதியது.
இதனால் பேருந்தின் ஒருபக்கம் நொறுங்கி போனது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பயத்தில் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த அனைவரும் விபத்து ஏற்பட்ட பேருந்தில் உள்ளவர்களை மீற்றிருந்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஏற்பட்ட விபத்தினால் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.