ஈரோடு மாவட்டத்தில் நடந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார் உரையாற்றினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு சொந்தமான 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் காணாமல் போயிருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் 34 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் தற்சமயம் 26 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது. சென்ற ஆட்சி காலத்தின் போது தவறான செயல்பாடுகள் காரணமாக, தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு 400 கோடி ரூபாய் இழப்புகள் உண்டானது என்று தெரிவித்திருக்கிறார்.
அந்தக் கூட்டம் முடிவுற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சிவகுமார் தெரிவித்ததாவது, சென்ற ஆட்சி காலத்தில் 36 லட்சம் செட்டாப் பாக்ஸ் இல் கொடுக்கப்பட்டு இருக்கிறது .இதில் இரண்டு லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் பழுதாகி இருந்தாலும் மீதம் 8 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என கூறி இருக்கின்றார்.
இதற்கு காரணமாக, தெரிவித்து இருப்பது சென்ற ஆட்சிக்காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் அலட்சியம் தான் என்று சொல்லப்படுகிறது. முதல் இடத்தில் தான் அரசு கேபிள் டிவி நிறுவனம் இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. சென்ற ஆட்சியாளர்கள் சரியான செயல்பாடுகளில் இல்லாததால் தற்போது இது இரண்டாவது இடத்திற்கு சென்று இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
அதை தற்சமயம் முதலிடத்திற்கு நிச்சயமாக கொண்டு செல்வோம் கேபிள் கட்டணத்தை பொருத்தவரையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டணம் மட்டும் தான் குறைவாக இருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.