தேர்தலில் வெளிப்படை தன்மை அதிகரிக்க அரசு முடிவு!! வாக்கு ஒப்புகை சீட்டு கருவியில் புதிய அம்சம்!!
நாட்டின் முதல்வரையும் பிரதமரையும் தேர்ந்தெடுக்க மக்கள் தங்களிடம் ஓட்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான் இந்த வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி.
மக்கள் என்னதான் வாக்குகளை தாங்கள் தேர்தெடுக்கும் தலைவருக்கு செலுத்தினாலும் அதற்கு அவர்கள் மறைமுகமாக செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.எந்த ஒரு குடிமகனும் தாங்கள் யாருக்கு வாக்களிக்க போகின்றோம் என்பதையும் வாக்களித்த தொகுதியையும் ஒரு போதும் பொதுஇடங்களில் சொல்லவேண்டிய கட்டாயம் இல்லை.
அந்த வகையில் தேர்தலில் வாக்களிக்கும் வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவியில் புதிய அம்சத்தை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விவிபிஎடி புதிய என்ற அம்சத்தை அறிமுகபடுத்தியுள்ளது. இதனில் முதற்கட்டமாக அந்த கருவியில் வேட்பாளரின் பெயர் ,அவர் சின்னம் ,வரிசை எண் ஆகியவற்றை இனி வாக்குசாவடிகளில் தொலைக்காட்சி ஒன்று அமைக்கப்பட்டு அதில் வாக்களிக்க வரும் குடிமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த கருவியில் கட்சி சின்னம் ,வேட்பாளரின் பெயர்களை மற்றும் எந்தெந்த சின்னங்கள் போட்டி இடுகின்றதோ அவற்றை சேர்க்கும் பணி நடைபெற்று வருகின்றது என்று மத்திய சட்ட அமைச்சகம் வெளியட்ட ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் வாக்களிக்கும் இயந்திரத்திற்கு அருகில் விவிபிஏடி என்ற கருவி அமைக்கப்பட்டு இதன் மூலம் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க இருக்கிறோம் என்பதை அறிந்து கொண்டு வாக்களிக்க முடியும்.
இதன் மூலம் நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளருக்குத்தான் வாக்களித்து உள்ளோம் என்பதை வாக்காளர் உறுதி செய்து கொள்ளலாம்.