அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அரசின் டபுள் டமாக்கா ஆஃபர்! அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் உயர்வு!
இன்று 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது தமிழகத்தின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.வருடம்தோறும் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அதேபோல் இன்றும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கினார்.
பிறகு உரையாற்றிய அவர், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறினார். அதில் மத்திய அரசை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் 31 இல் இருந்து 34 சதவீதம் அகவிலைபடி உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். தற்பொழுது 18000 ஆக வழங்கப்படும் அகவிலைப்படி இனி 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இவ்வாறு அகவிலைப்படி உயர்த்தியதால் அரசுக்கு ஆண்டு 1,947.60 கோடி ரூபாய் அதிகபட்சமாக செலவாகும் என்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்த அகவிலைப்படி உயர்வாள் 16 லட்சம் பேர் பயனடையும் முடியும். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியமும் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதாவது 18 ஆயிரமிலிந்து 20000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும், வீரர்களின் வழித்தோன்றல்கள் அதாவது பாண்டியன், கட்டபொம்மன் ,சிவகங்கை மருது பாண்டியர் ஆகியோரின் சகோதரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.தற்பொழுது ஒன்பதாயிரம் பெற்றுக் கொண்டவர்கள் பத்தாயிரம் ஆக பெறுவர் என்றும் முதலமைச்சர் கூறினார்.