Uttar Pradesh:உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் கசிவு காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ளார்கள்.
உத்திர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் மகா ராணி லட்சுமி பாய் என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த மருத்துவமனையில் திடீரென வெள்ளிக்கிழமை அன்று இரவு 10.45 மணி அளவில் குழந்தைகளுக்கான சிசு பராமரிப்பு பிரிவில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. இந்த தீ விபத்தில் சுமார் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகியும், அந்த விபத்தில் ஏற்பட்ட புகையால் மூச்சு திணறியும் இறந்துள்ளன.
மேலும் 37 குழந்தைகள் எந்த ஒரு காயம் இன்றி பாதுகாப்பக மீட்டனர். இருந்த போதிலும் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகம் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த செய்தி அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் செயல்பட்டன. இந்த சம்பவத்தால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள். மேலும் இந்த தகவலை அறிந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வேதனை தெரிவித்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அது மட்டும் அல்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் தகவல் அளிக்க செய்ய வேண்டும் என காவல் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் மின்கசிவு காரணமாக ஏற்பாடு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்தை ஆரம்ப நிலையில் பார்த்து இருந்தால் குழந்தைகள் எந்த ஒரு பாதிப்பும் இன்றி மீட்கப்பட்டிருக்கலாம் என மக்களால் கூறப்படுகிறது.