குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!! இதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்!!

0
118

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை!! இதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள்!!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது அது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது மிக கடினமாக இருக்கின்ற நிலையில் அரசு வேலை கிடைப்பது அதைவிட சிரமமாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு

அரசு வேலை தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த வாரிசு வேலை என்பது என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அரசு வேலை செய்யும் நபர் தனது பணியின் காலம் முடிவதற்கு முன்பு இறந்துவிட்டார் என்றால் அந்த வேலை குடும்பத்தைச் சார்ந்த ஒரு நபருக்கு செல்லும்.

அது குறிப்பாக யாருக்கெல்லாம் சேரும் என்றால் அந்த நபரின் அக்கா, அண்ணன், தம்பி, மனைவி, மகள், மகன், போன்ற அனைவருமே இதற்கு தகுதியுடையவர்கள்.

இவ்வளவு நாட்களாக வாரிசு வேலை என்றால் அது மகன்களுக்கு மட்டும்தான் போய் சேரும் என்று கருத்து பரவி இருந்த நிலையில் தகுதியுடையவர் யாராக இருந்தாலும் அந்த குடும்பத்தை சார்ந்திருந்தாள் மட்டுமே போதும் அவர்களுக்கு கட்டாயம் அரசு வேலை வழங்கப்படும்.

இதிலும் வாரிசு பல பேர் இருந்தாலும் ஒருவருக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்படும்.

இவ்வாறு குடும்பத்தை சார்ந்தவர் அரசு வேலை பெற விரும்பினால் இறந்தவர்களின் குடும்பத்தில் யார் பெயரில் விண்ணப்பம் செய்கிறார்களோ அவரைத் தவிர அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு அவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று மறுப்பின்மை சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

மேலும் அந்த குடும்பத்தில் மூத்த நபர் இருந்தாலும் அதைவிட இளைய நபருக்கு அந்த வேலையை கேட்டு வந்தால் முழுமையான காரணத்தை கூற வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு 18 வயது கட்டாயம் நிரம்பி இருக்க வேண்டும். இறந்தவரின் பெற்றோர் அல்லது மனைவி இதற்கு விண்ணப்பிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு 50 வயது மிகாமல் இருக்க வேண்டும். அதே சகோதர சகோதரிகள் விண்ணப்பிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு 40 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

அதுவும் இந்த வாரிசு வேலை கிடைப்பது மிகவும் எளிதல்ல இதற்கு வருட கணக்கில் ஆகலாம்.

இதற்கு தகுதியான ஆவணங்கள்

1:இறந்த ஊழியரின் பதிவேடு சான்றிதழ் நகல்.

2:அந்தப் பகுதி வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட வாரிசுரிமை சான்றிதழ்.

3:பணியில் இறந்தவரின் இறப்புச் சான்றிதழ்

4:மறுப்பின்மை சான்றிதழ்

5:குடும்பத்தின் வருமான வரி சான்றிதழ்

6:வயது சான்றிதழ்

இந்த அனைத்து ஆவணங்களுடனும் இருந்தால் மட்டுமே வாரிசு வேலை கிடைக்கும்.

மேலும் விண்ணப்பிக்கும் நபர் இருக்கும் குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இருக்கக் கூடாது ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது மற்றும் எந்தவித சொத்து மதிப்பும் இருக்கக் கூடாது இவ்வாறு இருந்தால் அவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படாது.

Previous articleஇந்த ஆண்டிற்கான TLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Next articleபுது வண்டி வாங்க போறீங்களா!! இதனை தெரிந்து கொண்டு வாங்குங்கள்!!