தமிழ் மொழி தெரிந்தால் தான் இனி அரசு வேலை!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!
அரசு பணியாளருக்கான சட்ட திருத்த மசோதாவானது இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ததையொட்டி இனிவரும் நாட்களில் பணியில் இருப்பவர்கள் தமிழில் மொழி குறித்து போதிய அளவு தேர்ச்சி இல்லாது இருந்தாலும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்படும் அதற்குள் தமிழ் மொழி குறித்து தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்த சட்ட திருத்தமானது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் மொழி குறித்து 100% அறிந்த தேர்ச்சி பெற்ற இளைஞர்களை பணி நியமனம் செய்வதற்கு என தெரிவித்துள்ளனர்.அதேபோல இனி வரும் நாட்களில் அனைத்து தேர்வுகளும் கட்டாயம் தமிழ் மொழி இருக்கும் என்பது குறித்து டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியே இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணைப்படி இதன் செயல்பாடு குறித்து இன்று சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எனவே இனிவரும் அனைத்து அரசு வேலைகள் குறித்த தேர்வுகளுக்கு தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.