தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்: இது தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேவையான பணியாளர்களை, தகுந்த தேர்வு முறையின் அடிப்படையில் தேர்வு செய்ய உருவாக்கப்பட்ட, தமிழக அரசின் ஓர் அமைப்பாகும். தமிழக அரசு தேர்வாணையம் தான், இந்தியாவிலேயே மாநில அளவில் உருவாக்கப்பட்ட “முதல் மாநில தேர்வாணையம்” ஆகும். இந்த தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும், பணியாளர்களை தேர்வு செய்யும் நோக்கத்தில், தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, அரசுக்கு தேவையான பணியிடங்களை உரிய காலத்தில் நிரப்ப தேர்வாணையம் உதவுகிறது.
இந்நிலையில் தேர்வாணையமானது, புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அரசு அலுவலகங்களில் பணிபுரிய “தட்டச்சு பயிற்சி” பெற்றவர்களை தேர்வு செய்யப் போவதாகவும், இதற்காக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள “50 பணியிடங்களை” நிரப்ப உள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, தற்போது 50 பணியிடங்கள், தட்டச்சு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு, வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வின் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றையும் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி,
வயது வரம்பு: குறைந்தபட்ச “வயது 18” ஆகவும், அதிகபட்ச “வயது 32” எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் “அரசு அல்லது அரசு உதவி பெறும்” பள்ளிகளில், 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் கணினி முறை தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தேர்வில் கலந்து கொள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு தேர்வாணையத்தின், அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்,விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, தேர்வாணையத்தின் வலைதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.12.2024
கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும், எந்த ஒரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.