8ம் வகுப்பு முடித்திருந்தால் அரசு வேலை… அதுவும் சென்னையில்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க…

0
133

8ம் வகுப்பு முடித்திருந்தால் அரசு வேலை… அதுவும் சென்னையில்… மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க…

சென்னையில் கிண்டியில் இயங்கி வரும் வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைகளுக்கு தேவையான கல்விக் தகுதி, மாதச் சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பணியின் பெயர்: காவலர், அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி:
அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பும் காவலர் பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் முதல் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் முஸ்லீம் பிரிவினர் ஆகியோர்களுக்கு 34 வயது வரையிலும் ஆதி திராவிட பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்கள் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அரசு வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரக அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை வைத்து கீழ் அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் வழியாக அனுப்பலாம். அல்லது நேரடியாக வந்தும் கொடுக்கலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர்(நிர்வாகம்), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம்(வேலைவாய்ப்பு பிரிவு), எண் 42, ஆலந்தூர் ரோடு, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600032.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சரியான முகவரிக்கு 29.08.2023ம் தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Previous articleமழையில் நினைந்தபடி பேருந்து வருகைக்கு காத்திருக்கும் மாணவர்கள்… நீண்ட நாட்களாக நீடித்து வரும் அவலநிலை… நடவடிக்கை எடுக்குமா அரசு…
Next articleகாரைக்கால் அருகே இருசக்கர வாகனம் கார் மோதல்… பரிதாபமாக மூன்று பேர் பலி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…