எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் அரசு வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Rupa

நாமக்கல் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள டிரைவர்,மருத்துவ பணியாளர்,கிளீனர் உள்ளிட்ட பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: நாமக்கல் மாவட்ட நல வாழ்வு சங்கம்

பணியிடம்:

நாமக்கல்

பணி:

1)மருத்துவ பணியாளர்
2)கிளீனர்
3)டிரைவர்

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியாதி எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.8,500/- முதல் ரூ.13,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிகளுக்கு தகுதி,ஆர்வம் இருப்பவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அதை பிழையின்றி பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலை இணைத்து தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 28 மாலை 5 மணிக்குக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.