திமுக ஆட்சிக்கு வர காரணமாக இருந்த அரசு ஊழியர்களாலேயே நடத்தப்படும் போராட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் அதிர்ச்சி!

0
168

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படாததை தொடர்ந்து இன்றைய தினம் அதனை கண்டித்து அரசு அலுவலகங்கள் எதிரில் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து அரசு துறை ஊழியர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.சென்ற அதிமுக ஆட்சியில் ஊழியர்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என குற்றச்சாட்டு இருந்து வந்தது. அப்போது அரசு ஊழியர் அமைப்புகள் அனைத்தும் திமுகவிற்கு ஆதரவு கொடுத்தனர். தேர்தலில் திமுகவும் ஆட்சியை கைப்பற்றி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

இந்த நிலையில், சென்ற காலத்தில் அரசு ஊழியர்களின் பறிக்கப்பட்ட சலுகைகளை திமுக ஆட்சி மீண்டும் வழங்கும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த ஆட்சி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை வழங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள் அரசு ஊழியர் அமைப்பினர்.

நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஆறுமாத காலத்திற்கு ஒரு முறை அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கப்படும். சென்ற 2020ஆம் ஆண்டு நோய்த்தொற்று பரவல் இருந்ததால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி அதன் அடிப்படையில் இந்த வருடம் அதனை வழங்கியிருக்கின்றார்.

அதேபோலவே தமிழக அரசு கடந்த வருடம் ஜனவரி மாதம் கொடுக்கவேண்டிய 11 சதவீதம் அகவிலைப்படியை இந்த வருடம் ஜூலை மாதம் முதல் அமைச்சர் ஸ்டாலின் கொடுப்பார் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனாலும் இந்த வருடம் ஜூலை மாதம் வழங்க வேண்டிய அகவிலைப்படியை 2022ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வழங்குவதாக அரசு அறிவித்திருக்கிறது. அவர்களுடைய இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களின் தலையில் இடி விழுந்ததைப் போல இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள் அரசு ஊழியர் அமைப்பினர்.

அனைத்துத் துறை அரசு ஊழிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் திமுக ஆட்சியில் அறிவிப்பு அரசு ஊழியர்களை நிலைகுலைய வைத்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைவாசி உயர்வு காரணமாக, அரசு ஊழியர்களின் குடும்பத்தவர்களின் மாத பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதை நிதி அமைச்சர் செலவு என்று தெரிவிக்கிறார் அது தவறான கருத்து எனவும், அரசு ஊழியர்களுக்கு கொடுப்பதை முதலீடு என்று தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை தமிழக அரசு வழங்கவில்லை எனில் அரசு ஊழியர்களின் போராட்டம் இன்னும் கடுமையாக இருக்கும். நிதியமைச்சர் அறிவிப்பு வெளியானவுடன் முதல் கட்டமாக கடந்த 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினோம் இன்று தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அரசு ஊழியர்களை அடுத்தடுத்த போராட்டங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

அரசு ஊழியர்கள் உடைய கட்சி என பெயரெடுத்த திமுக தற்சமயம் அரசு ஊழியர்களின் போராட்டத்தை சந்திக்க இருக்கின்றது.

இதன் மூலம் திமுகவையும், முதலமைச்சர் ஸ்டாலினையும், அரசு ஊழியர்கள் முகத்திரையை கிழித்து இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. தேர்தல் சமயத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற ஆசையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விட்டு ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கோரிக்கையில் இருந்து அப்படியே தடாலடியாக மாறும் ஒரு மனப்பான்மையை திமுக அரசு கொண்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

Previous articleஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதிகரித்த பலி எண்ணிக்கை!
Next articleமேட்டூர் அணையில் தெரிந்த கோபுரம்!