அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! தமிழக அரசின் திடீர் அறிவிப்பு!!

0
124

Tamilnadu Gov: போக்குவரத்து துறையில் 2022- டிசம்பர் முதல் 2023 மார்ச் வரை ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு தற்பொழுது தமிழக அரசானது நிதி ஒதுக்கீட்டை செய்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு ஆனது தீபாவளி முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கி நவம்பர் வரை ஓய்வு பெற்ற ஓய்வு வாங்கிய மேலும் மரணமடைந்த நபர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பணிக்கொடை விடுப்பு ஒப்படைப்பு ஓய்வூதிய ஒப்படைப்பு என ஏதும் தராமல் இருந்தனர்.

இது குறித்து தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் பெயரில் 1031 கோடியானது இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 3414 ஊழியர்கள் பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கும் பழைய நிலையே உண்டான பட்சத்தில் தற்பொழுது மீண்டும் 372 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இதன் மூலம் 1679 பயனாளிகளுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை விடுப்பு, ஓய்வூதியம் என அனைத்தும் வழங்க முடிவு செய்துள்ளனர். இந்த தகவலானது போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்கள் என தொடங்கி பலருக்கும் மகிழ்ச்சியை தரவுள்ளது. இதன் அவர்களது குடுமபத்தினர் பெருமளவில் நிம்மதி அடைந்துள்ளனர்.

Previous articleதிருப்பதி பக்தர்கள் தேவஸ்தானம் வர வேண்டாம்!! கோவில் நிர்வாகம் அட்வைஸ்!!
Next articleஷமி அணியில் இடம்பெற வேண்டும்!! திமிர்த்தனம் பிடித்த இந்திய அணி விமர்சித்த ஆஸ்திரேலியா பத்திரிக்கையாளர்!!