வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு  பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்!

0
180
School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!
School-going girl pregnant? Died after taking fake pills! Shocking information that came out!!

 

வயிற்று வலி மாத்திரை சாப்பிட்டு  பட்டதாரி மாணவி திடீர் மரணம்! நாமக்கல் மாவட்டத்தில் நடந்த சோகம்!

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவருக்கு கவிப்பிரியா என்ற மகள் உள்ளார் . கவிப்ரியா அவர்களின் வயது 25 . இவர் தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து முடித்துள்ளார் .பட்டதாரியான இவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிற்று வலி இருந்து வருகிறது.

இதனால் அவர் வெளியில் எங்கும் செல்லாமல் மூன்று ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மிக அதிக வயிற்றுவலி ஏற்பட்டதால் தாங்கிக் கொள்ள முடியாமல் அருகிலுள்ள மெடிக்கலில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுள்ளார். மாத்திரை சாப்பிட்ட பிறகும் வயிற்றுவலி கொஞ்சம் கூட குறையவில்லை. வலியால் துடித்த கவிப்பிரியா தன் தந்தையான கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தார்.

வீடு திரும்பிய அவர் கிருஷ்ணன்  கவிப்பிரியாவை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி கவிப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

வயிற்று வலிக்காக மாத்திரை சாப்பிட்டாரா இல்லை வேறு ஏதாவது பிரச்சினை காரணமாக  வேறு  மாத்திரை சாப்பிட்டாரா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பட்டதாரி உயிரிழந்த செய்தி குறித்து வேலகவுண்டம்பட்டி துறையினர் வழக்கு பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த தவறும் செய்யாத உயிர் அநியாயமாக பரிபோயின.  சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது.

Previous articleகாஞ்சிபுரத்தில் ஷிப்ட் முறையில் நடைபெறும் ஸ்கூல்! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!
Next articleஎம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் மாணவர் சேர்க்கை! விண்ணப்பிங்க கடைசி நாள் இதுவே!