உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக என்ற காரணத்தினால் அவர்களின் பட்டப்படிப்பு கனவிற்கு பணம் ஒரு தடையாக இருக்கிறது.
இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டிற்கான கல்வி உதவித் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த அறக்கட்டளை மூலம் சுமார் 5100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ரூ.2,00,000 முதல் ரூ.6,00,000 வரை கல்வி உதவித் தொகை வழங்கப்டும்.
2024-25 ஆம் ஆண்டின் கல்வி உதவித் தொகை குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:
“இந்தியா முழுவதும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை கல்விக்கான உதவித்தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.அந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விண்ணப்பங்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை வரவேற்கிறது.
மொத்தம் 5100 கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.இந்தியாவின் வளர்ச்சிக்காக பல திறமையான இளைஞர்கள் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை அவர்களது கல்விக்கான உதவித்தொகையை வழங்கி வருகிறது.
இந்தியாவில் உள்ள இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் உதவித்தொகை விண்ணப்பங்களை அனுப்புவதற்கு தகுதி பெறுகின்றனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய பல மாணவர்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவித்தொகை வழங்கி அவர்களை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.
5000 இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரையிலும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு படிக்கும் முதுகலை மாணவர்களுக்கு அதிகபட்சமாக 6 லட்ச ரூபாய் வரையிலும் ரிலையன்ஸ் அறக்கட்டளை உதவி தொகையாக வழங்குகிறது. ரிலையன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்திய மறைந்த திருபாய் அம்பானியின் 90-ஆவது பிறந்தநாள் 2022 டிசம்பர் மாதம் கொண்டாடப்பட்டது.
அப்போது பேசிய ரிலையன்ஸ் அறக்கட்டளை தலைவர் நீடா அம்பானி, அடுத்த 10 ஆண்டுகளில் 50,000 மாணவர்களுக்கு கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
தற்போது வரை 23 ஆயிரம் மாணவர்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை கல்விக்கான உதவித்தொகையை வழங்கி உள்ளது, இதனை பெற விரும்புவோர் https://www.scholarships.reliancefoundation.org/ என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் தகுதி அடிப்படையில், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பங்கள் அக்டோபர் 6-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.