இன்று தமிழகம் முழுவதும் நடக்கவிருக்கும் நிகழ்வு:! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

0
182

இன்று தமிழகம் முழுவதும் நடக்கவிருக்கும் நிகழ்வு:! மக்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

தமிழகம் முழுவதும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

கிராமசபை கூட்டம் எதற்காக நடத்தப்படுகிறது:!

கிராம சபைக் கூட்டத்தில், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல்,
ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்
தன்மையையும்,பொறுப்புணர்வை ஊக்குவித்தல், மற்றும் செயல்படுத்தப்படுதல்
மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே போன்ற மக்களுக்கும்,அரசாங்கத்திற்கும் இடையே நடத்தப்படும் ஒரு பரஸ்பர கூட்டமாகும்.

அதன்படி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணியளவில் நடக்கவிருக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது,
பங்களிப்பினையும் கோரிக்கைகளையும்,
மனுக்களையும் கொடுக்கலாம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்றும்,எனவே கிராம மக்கள் அவரவது ஊராட்சியில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Previous articleரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி:! இனி நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டாம்!!
Next articleதற்காலிக ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! ஊதியம் குறித்து தமிழக அரசின் உத்தரவு!!